Monday, August 18, 2008

கூறுவார்கள் - கவிதை



கூறுவார்கள், மலரினும் மெல்லியது காதல்
அதை விட மெல்லியவள் காதலி- வாடாமல் பார்த்துக்கொள்

பாலின் தூய்மை இரவிலும் தெரியும் காதலின் தூய்மை கனவிலும் தெரியும் - கலையாமல் விழித்துக்கொள்

விளக்கு அனைந்தவுடன் துவங்குவது இருட்டு
காதல் அனைந்தவுடன் துவங்கிவிடும் துறட்டு - அமராமல் பொத்திக்கொள்

பெட்டிக்குள் வைக்கப்பட்ட நகையாக காதலை மனதுக்குள் வைக்காதே
நகை கழுத்தில் இருந்தால்தான் முகத்தில் புன்னகை
காதல் காதலியிடம் இருந்தால்தான் உன் அகத்தில் புன்னகை - வெளுக்காமல் காத்துக்கொள்

தெரிந்தோ தெரியாமலோ நீ பிடித்துவிட்டாய் புலி வால்
அதை தெரியாமல் விட்டு விட்டால் உன் முதுகில் விழும் பலி வாள் - பதறாமல் பற்றிக்கொள்

பல பூக்களை கொண்டு ஏமாற்றாதே காதலியை
அவள் ஒரு பூ உன் காதில் வைத்தால் நீ ஆவாய் கோமாளியாய்- பூ கொடு, வாங்காதே

காதலின் நாடித்துடிப்பை அடிக்கடி எண்ணிக்கொள்
நாளைய தினம் அது உன் நாடி கட்டும் துணியாக மாறாமல் இருக்க - உயிர் எடு, கொடுக்காதே

இவ்வளவும் தெரிந்தும் - கூறுவார்கள்- மலரினும் மெல்லியது காதல் என்று

1 comment:

Anonymous said...

Excellant kavithai.