Sunday, September 14, 2008

கடன் காதலை முறிக்கும்


அவன்: பாக்கி மொத்தம் இருநூறாம், நான்கு வருடங்கள் ஆயிற்றாம். இப்போது ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன்.

அவள்: நான் மட்டும் வைத்துக்கொண்டு வஞ்சனையாய் செய்கின்றேன். வந்தால் கண்டிப்பாக கொடுத்து விடுவேன் உனக்கு. ஆனால் வரவில்லையே.

அவன்: வரவில்லையா?

அவள்: ஆமாம் வரவில்லை!

அவன்: நீ வரவில்லை என்கிறாய் சரி, உன்னிடம் ஒளித்து வைத்திருப்பதில் இருந்து ஒன்றையாவது கொடுக்கலாம் அல்லவா?

அவள்: இப்படித்தான் சென்ற முறை வாங்கிய மூன்றையும் திருப்பிக்கொடுக்கவில்லை. இப்பொழுது மட்டும் எப்படியாம்?

அவன்: கள்ளியடி நீ! என்னிடம் கடன் வாங்காமல் நீ பெற்றவையை கணக்கிலிடவா? சென்ற முறை உனக்கு ஒன்றுக்கு இரண்டு அனுப்பினேன். ஆனால் அவை கிடைக்கப்பெறவில்லை என்கிறாய். என்னை ஏமாளியாக்கிவிடாதே.

அவள்: ஏமாந்தது நீயா? இல்லை நானா? என்று கணக்குப்பார்த்தால் தெரிந்துவிடும்

வருடம் - 1998 - 150 முத்தங்கள் நீ பாக்கி
வருடம் - 1999 - 200 முத்தங்கள் நான் பாக்கி
வருடம் - 2000 - 300 முத்தங்கள் நீ பாக்கி
வருடம் - 2001 - 50 முத்தங்கள் நான் பாக்கி

மொத்தம் 200 முத்தங்கள் நீதான் பாக்கி

தெரியாத உனக்கு கடன் காதலை முறிக்கும் என்று.

No comments: