Tuesday, September 16, 2008

மழை மகள்

விழுகும் அந்தி மழையில் வந்து நனையும் தளிர் தழையே
நுதல், விழி, இதழ் வழி ஒழுகும் மழைத்துளியே

அலையும் இரு பரப்பின் இடைவெளியில் வந்து துளைக்கும்
சிலிர்க்கும் உடல், திறக்கும் இதழ் சிரிக்கும்
தளிர் உடல் குளிர் எடுக்கும் கை நடுக்கம்

குடை பிடிக்க மனம் தடுக்கும்
இடி இடிக்கும் உயிர் பதைக்கும்
தடையில்லா சுகம் ருசிக்க மழை இடையில்லா பெய்யும்

கொட்டும் மழை கூரை தட்டி கூத்தாடும், தாரை ஓரம்போகும்
கொதிக்கும் தரை குளிக்கும், வெயில் புளிக்கும், பயிர் பிளைக்கும்

தரை படும் பாதம் மழை நுரை கண்டு ஆடும் வெந்நரை கூட பாடும்
கை கப்பல் செய்யும், மனம் பயணிக்கும், உலகம் உள்ளங்கையாகும்
கொலம்பஸ் கோமாளியாவான், கோமள வள்ளி, பூமகள் அல்லியாவாள்

ஆம்பல் அவள் அழகை கான மேகங்கள் ஊடல் கொள்ளும்
மின்னலை தூதாக்கும், மின்னல் வரும், சன்னல் தொடும்
சன்னலும் மின்னலும் சரசம் கொள்ளும்
தென்றலும் தூரலும் உரசிக்கொள்ளும்
கூடலின் முடிவில் கூதல் தரும்

மழைத்துளி தொடும் கதிர் இறக்கும் மாய ஒளி பிறக்கும்
நல் வடிவான வானத்தில் வில் வடிவாய் வானவில் பிறக்கும்

தேகம் மெழிந்த மேகம் சோகமாகும் பெய்யும் மழையும் பொய்யாகும்
மழை நின்ற பின்னும் மரக்கிளையும் கண்ணீர் வடிக்கும்

3 comments:

நிலாரசிகன் said...

என்னை நினைவிருக்கிறதா நண்பா?

தாயுமானவள் said...

நண்பனே மறக்கமுடியுமா நமது நட்பை. எங்கு இருக்கிறீர்கள்?

தாயுமானவள் said...

உமது புத்தகங்களை எப்படி USA ல் வாங்குவது?