
"ஏலே.. அங்கன அம்புட்டு பேரும் காத்திருக்காக வெரசா வாலே". இது சண்முகம் அவருக்கு இதுதான் முதல் அணுபவம். கல்யாணத்தை ரொம்ப சிறப்பா செய்யணும்னு ரொம்ப நாளா மனக்கணக்கு போட்டிருந்தவரு இன்னைக்கு செயல்படுத்திக்கிட்டு இருக்காரு . "பொன்னுசாமி தாத்தாவை மொதல்ல போயி கூட்டியாங்கள அவுகதான் தாலி எடுத்து கொடுக்கனும்". சண்முகம் ஆளுகள விரட்டிக்கொண்டிருந்தார். பொன்னுசாமி தாத்தான் குடும்பத்திலேயே ரொம்ப மருவாதயானவுக, நல்ல வாழ்க்கை வாழ்ந்தவுக. அதனால எந்த நல்ல காரியன்னாலும் அவுகளுக்குத்தான் மொத மரியாதை. அவுக ஆரம்பிக்காம எந்த காரியமும் நடக்காது. "என்னல சண்முகம், என்னய கூட்டியார ஒரு ஆளா. நாந்தேன் ஓன் பின்னாடிய நிக்குதேனுல" இது பொன்னுசாமி தாத்தா.
"முகூர்த்தம் முடியிறதுக்கு இன்னும் அரை மணி நேரந்தேன் கெடக்கு, எல்லாம் ரெடியாயிடுச்சு. ஊருல்ல உள்ள பெரிய ஆளுக எல்லாம் வந்தாச்சு, பக்கத்து ஊருல உள்ள சர்தார் பாயி கூட வந்துட்டாரு சின்ன வயசுல இருந்து ஃப்ரன்டு. நாம எல்லாம் சரியா பண்ணிட்டோம்ல? எல்லாம் அந்த கடவுள்தான் காப்பாத்தனும். மாப்பிள்ளை லட்சனமா இருக்காரு, பொன்னு சந்தோசமா இருக்கனும். இந்த சமையல்காரன் எல்லா வேலையும் பாத்துட்டானா? கொறஞ்சது ஆயிரத்து ஐநூரு பேராவது இருப்பாங்க போல இருக்கு, சாப்பாடு பத்திடுமா?. எத்தனை பேர வச்சு வேல வாங்குனாலும் பத்தாது போல, அங்கனயும் இங்கனயுமா கொஞ்சம் கொற தெரியுது." இது சண்முகம் மணமேடையில ஏறுறதுக்குல்ல இத்தனையும் நெனக்கிறாரு.
அவருடைய பொன்ன அப்பதான் மணமேடையில பாக்குறாரு. "எத்தனை அழகு, இத்தனை வருசமா இதுக்காகத்தான் க்ஷ்டப்படேன். லட்சுமி மாதிரியில்ல இருக்கா, நான் கூட பயந்துக்கிட்டேயில கெடந்தேன். கடவுளா பாத்து எல்லாம் நல்லபடியாக்கிட்டாரு".

அய்யரு, மந்திரம் ஓதி முகூர்தத்துக்கு ரெடியாயிட்டாரு. இந்த மாதிரி ஒரு சந்தோசாமான நாளுக்குத்தான், ரொம்ப நாளா க்ஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன். அது இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்கப்போவுது. அய்யரு கெட்டிமேளம்ன்னு சொன்னவுடன், பொன்னுசாமி தாத்தா தாலிய எடுத்துக்கொடுக்க, மாப்பிள்ளை எம்பொன்னு கழுத்துல தாலியக்கட்டினாரு. "எவ்வளவு பெரிய காரியத்த முடிசுட்டல. ரொம்ப சந்தோசமா இருக்குல" என்று பொன்னுசாமி தாத்தா வாழ்த்த, எனக்கு என்னவோ தேசிய விருது கெடச்ச மாதிரி இருந்தது.
"என்னல சண்முகம், இங்க என்னல பண்ணுத அங்கன அம்புட்டுபேரும் காத்துக்கிடக்காவுக வெரசா வாலே" என்று பொன்னுசாமி தாத்தா கூட்டிட்டு போனாரு. என்னால இரண்டு அடி கூட எடுத்து வைக்க முடியல. பொன்னுசாமி தாத்தா என்னய பார்த்து "என்னல இது, மனச தேத்திட்டு வாலே எல்லாம் கொஞ்ச நாளுல சரியாப்போயிடும்" என்று கையை புடிச்சி கூட்டிட்டுப்போனாரு.

ஏல... வெரசா வாலே.. தண்ணி காத்திட்டுக்கெடக்குள்ளே. இது நம்ம சர்தார் பாய் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து குடிச்சு 20 வருசமாச்சு.
No comments:
Post a Comment