
மச்சக்கன்னி ஒருத்தி சித்திர வெயிலுல கத்தரி கொல்லயில,பத்தடி பக்கத்தில,
சிரிக்கி நின்னு சிறுச்சா...
ஆத்தாடி மனசுல காத்தாடி பறக்குது...
கூத்தாடி பய எனக்கு குறும்பாடு கேக்குது...
சங்கதி தெரியுமா, சரசக்கா வூட்டுலன்னு...கத பேச ஆரம்பிச்சவ..
மொகத்துல.. செம்பருத்தி சிரிப்பு!பம்பர சுறுசுறுப்பு! ...
கம்பரு கவிதையோட வனப்பு!வள்ளுவரு குறளப்போல இடுப்பு!
ஹும்.. உன்ன எப்ப பாப்பேனோ, கையப்புடிச்சு போவேனோ?
குத்த வச்சு கூனி மீனு அருப்பேனோ?,
பத்த வச்சு வத்த கொழம்பு வப்பேனோ?...
செத்த நேரம் மொத்தமடியில கெடப்பேனோ ?...
எட்டாத முறுங்கக்காயிக்கு கொட்டாவி விடுறேனோ?
கையே இல்லாம கறுதறுக்க நெனக்கிறேனோ?
பொய்யே இல்லாம பட்டணத்துக்கு போறேனோ?
அய்யோ, அய்யோ, ஆடு மேய்க்கிற ஆளு எனக்கு
கூடி மேய்க்க கூத்தியா கேக்குதோ...
சாதிப்பயக பாத்தானுகன்ன ...அந்தியில சங்கருத்து, அதி காலயில கடா வெட்டி
அடுத்த நாளே என் பொஞ்சாதிக்கு.. வேற கல்யாணங் கட்டி வச்சுருவானுக
ஆட மட்டும் மேப்போம், பொம்பளயாளுகல அப்புறம் பாப்போம்....
No comments:
Post a Comment