Monday, December 28, 2009

என் - அவள்

வெண் மதி அவள்
வெகுமதி அவள்
என் மதி அவள்
என் விதி அவள்
பின் என் சதி அவள்
என் சாதி அல்ல அவள்
இனி என் திதி அவள்

Sunday, December 27, 2009

ரன்னறுப்பு




களத்தின் வெளியே நிராயுதபாணியாய் ஒரு நிரஞ்சன்
அவன் கதை கொண்டு களம் புகக்கண்டால் கயவர் கூட்டத்தில் கலக்கம்
கையில் கதை கொண்டு சரித்திர கதை எழுதியவன்
எதிரி வீசும் அம்பை அவனுக்கே அனுப்பும் எத்தன்
கதிர் குனிந்தால் கதிரறுப்பு தலை நிமிர்ந்தால் ரன்னறுப்பு

Sunday, December 20, 2009

என்ன இல்லை இந்த திரு நாட்டில்

உயிருடன் இருப்பவர் உறங்க இல்லை - ஒரு நல்லறை
உயிர் மரித்தவர் உறங்க தனியாய் - ஒரு கல்லறை

கடன் அட்டை

மதியம் 1 .30  மணி, சென்னையின் உச்சி வெயில். சுகுமார் அந்த சாப்ட்வேர் கம்பெனியின் கதவு அருகே நின்று கொண்டு அந்த உயர்ந்த கட்டிடத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த கம்பெனியின் வேலை செய்பவர்கள் மதிய உணவு முடித்து ஒரு சிகரட் இழுப்பதற்கு வெளியில் உள்ள கடையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.


"ஆகா யாரும் நம்முடன் இல்லை, இன்று எப்படியாவது ஒருவரை முடித்து விட வேண்டும்" என்ற நம்பிக்கையோடு கால் கடுக்க காத்துக்கொண்டிருந்தான். வெளியில் தனியாக வந்த ஒரு இஞ்சினியரை மடக்கி, தன்னிடம் இருந்த கிரிடிட் கார்டின் விளம்பர சீட்டை காண்பித்தான். அதன் அருமை பெருமைகளை அவரிடம் சொல்லினான்.

இந்த கார்டினை வைத்துக்கொண்டால் உங்கள் கையில் பணம் வைத்திருகத்தேவையில்லை, கையில் பணம் இல்லையென்றாலும் பயன்படும், நமது பழைய பணம் கையாளும் முறைகளை மறந்து விடலாம், இந்த நூற்றாண்டின் அத்தியாவசியமான ஒன்று என்று புகழ் பரப்பிக்கொண்டிருந்தான்.

இறுதியில் அவர் கார்டை வாங்க சம்மதித்தார். "அப்படா இந்த மாத டார்கெட்டை  எட்டியாச்சு" என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் சுகுமார். முதலில் அம்மாவுக்கு இந்த மாத போனஸ் பணத்தை மணி ஆர்டர் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டே  நடையை கட்டினான் புதிய பணம் கையாளும் முறையின் பெருமை பேசிய சுகுமார்.

Saturday, December 19, 2009

வானுயரக்கனவு


உலர்ந்த சோலையில் மலர்ந்த காகிதம் நான்
மழைத்துளிபட்டு நான் நனைவதும் இல்லை
வெயில் பட்டு நான் சுடுவதும் இல்லை
மக்கி மண்ணாய் போகும் மனிதனும் இல்லை நான்
மரணத்தை மரிக்க வைக்கும் எனது பிறப்பு
காற்றில் கூட பறக்கா காகிதம் நான்
நான் நினைக்கும் கனவுகள் நிஜமாவதில்லை

The Seasons

Nature changes itself to revamp every three months of a year. The Four Seasons; Spring, Summer, Autumn and Winter. Oregon state is well known for its weather. No wild winter and no hot summer. But you can feel all at one place and enjoy each passing year with full of Four Seasons. Here are few snaps during my stay in the state now ready for your views.












Tuesday, December 8, 2009

Follow me on Twitter

Hereafter, You can follow me on Twitter at http://twitter.com/amzathmca. Thought of tweeting long time but got tied up with relocation. You can follow me on Twitter where I would often update what is going on here. If someone in India has Airtel cell number, please create a Twitter account, so you can follow up me on your mobile.

Denver Colarado

I have recently relocated to Denver, Colarado, USA. This is my second move in USA since two years. It was a really nice stay at Portland, Oregon. However, Denver is kinda cold. Though more than 300 days of sunshine, snows a lot during winter. But sometimes it is fun to stay at different weather conditions.

Saturday, April 4, 2009

Scribbling

Be a Human first rest is next