Sunday, December 20, 2009

கடன் அட்டை

மதியம் 1 .30  மணி, சென்னையின் உச்சி வெயில். சுகுமார் அந்த சாப்ட்வேர் கம்பெனியின் கதவு அருகே நின்று கொண்டு அந்த உயர்ந்த கட்டிடத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த கம்பெனியின் வேலை செய்பவர்கள் மதிய உணவு முடித்து ஒரு சிகரட் இழுப்பதற்கு வெளியில் உள்ள கடையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.


"ஆகா யாரும் நம்முடன் இல்லை, இன்று எப்படியாவது ஒருவரை முடித்து விட வேண்டும்" என்ற நம்பிக்கையோடு கால் கடுக்க காத்துக்கொண்டிருந்தான். வெளியில் தனியாக வந்த ஒரு இஞ்சினியரை மடக்கி, தன்னிடம் இருந்த கிரிடிட் கார்டின் விளம்பர சீட்டை காண்பித்தான். அதன் அருமை பெருமைகளை அவரிடம் சொல்லினான்.

இந்த கார்டினை வைத்துக்கொண்டால் உங்கள் கையில் பணம் வைத்திருகத்தேவையில்லை, கையில் பணம் இல்லையென்றாலும் பயன்படும், நமது பழைய பணம் கையாளும் முறைகளை மறந்து விடலாம், இந்த நூற்றாண்டின் அத்தியாவசியமான ஒன்று என்று புகழ் பரப்பிக்கொண்டிருந்தான்.

இறுதியில் அவர் கார்டை வாங்க சம்மதித்தார். "அப்படா இந்த மாத டார்கெட்டை  எட்டியாச்சு" என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் சுகுமார். முதலில் அம்மாவுக்கு இந்த மாத போனஸ் பணத்தை மணி ஆர்டர் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டே  நடையை கட்டினான் புதிய பணம் கையாளும் முறையின் பெருமை பேசிய சுகுமார்.

No comments: